Search
Search

என் அன்பே.. என் உயிரே.. இணையத்தில் வைரலாகும் அஜித் ஷாலினி ஜோடியின் போட்டோஸ் – Cute ஜோடிப்பா இவங்க!

குழந்தை நட்சத்திரமாக தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே கேரளா அரசின் மாநில விருதை பெற்ற நடிகை தான் ஷாலினி. தனது நான்காவது வயதில் நடிக்க தொடங்கிய ஷாலினி, 2001ம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான பிரியாத வரம் வேண்டும் என்ற படம் வரை சுமார் 17 ஆண்டுகள் சினிமா துறையில் இருந்து வந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் அவர் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சவாலியே சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்துள்ளார்.

இவர் நாயகியாக களமிறங்கிய பிறகு தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் காதலுக்கு மரியாதை, தளபதி விஜய் அவர்களுடன் அவர் இணைந்து நடித்த முதல் திரைப்படமும் இதுதான். அதன் பிறகு அவர் இரண்டாவதாக தமிழில் நடித்த திரைப்படம் தான் அமர்க்களம்.

இந்த படத்தில் தான் அவருக்கும், தல அஜித்திற்கும் காதல் மலர்ந்தது. அதன் பிறகு பெரிய அளவில் படங்களை நடிக்காத நிலையில் விஜயுடன் கண்ணுக்குள் நிலவு, மாதவனுடன் அலைபாயுதே, இறுதியாக பிரசாந்துடன் பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தல அஜித் அவர்களுக்கும் ஷாலினிக்கும் 2000வது ஆண்டு திருமணமான நிலையில் 23 ஆண்டுகளாக இந்த ஜோடி மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். தற்பொழுது கடலில் ஒரு கப்பல் மீது நின்று அவர்கள் எடுத்துக்கொண்டு ஃபோட்டோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது ஷாலினி அவர்களே இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like