Search
Search

முதல்கட்ட பைக் பயணம் நிறைவுற்றது.. விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்பு துவக்கம்!

தல அஜித் குமார் அவர்களுக்கு இந்திய சினிமா அரங்கில் அறிமுகம் தேவையில்லை, கடந்த 1993ம் ஆண்டு வெளியான அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதையின் நாயகனாக அறிமுகமானவர்தான் அஜித்குமார்.

அன்று தொடங்கி இன்று வரை சுமார் 30 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வருகிறார் அவர். தற்பொழுது மகிழ் திருமேனி இயக்கி வரும் “விடாமுயற்சி” என்ற படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

தல அஜித் எந்த அளவுக்கு சிறந்த நடிகரோ அதே அளவிற்கு பைக் மட்டும் கார் ரேசிங்கில் மிகுந்த ஈடுபாடு உடையவர். ஃபார்முலா BMW ASIA 2003 போட்டிகளிலும் மற்றும் ஃபார்முலா 2 போட்டிகளிலும் பலமுறை பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது அவர் தனது இரு சக்கர வாகனத்தில் இந்தியா, பூட்டான் மற்றும் நேபாள் ஆகிய மூன்று நாடுகளுக்கு தொடர் பயணம் மேற்கொண்டார். அதேபோல “விடாமுயற்சி” படத்தின் படபிடிப்பு முடிந்தவுடன் அவருடைய இரண்டாவது பயணத்திற்கு அவர் தயாராவார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

You May Also Like