அக்கிரகாரம் மூலிகையின் மருத்துவ குணங்கள்

அக்ரகாரம் வாத நோய்களையும் காக்கை வலிப்பு நோய்களையும் சரி செய்யக்கூடியது. நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்புகளுக்கு வலு கொடுக்கும். அக்ரகாரம் பூ இலைகளை சாப்பிடும்போது உமிழ்நீர் சுரப்பு அதிகமாகும். ஆண்மையைப் பலப்படுத்தும் அற்புதமான மருந்துகளில் அக்கரகாரம் மூலிகையும் ஒன்று.

அக்கிரகாரம், திப்பிலி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பொடி செய்து அதில் 2 கிராம் அளவு பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

அக்கிரகாரத்துடன் வல்லாரைச் சாறு சேர்த்து அரைத்து தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் காக்காய் வலிப்பு நோய் நீங்கும்.

அக்கிரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், நல்ல குரல் வளம் கிடைக்கும்.

அக்கரகார வேர்த்துண்டை சிறிதளவு எடுத்து வாயில் போட்டுக் கொண்டால் உமிழ் நீர் சுரக்கும். அந்த உமிழ்நீரை விழுங்கி வர, தொண்டை உள்நாக்கு பாதிப்பு மற்றும் அதிக தாகம் நீங்கும்.

ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் போன்றவற்றின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தொண்டை கட்டு, தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும்.

மேலும் அனைத்து விதமான மூலிகைகள் அதன் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

TAG : அக்கிரகாரம் மூலிகை பயன்கள், அக்கரகாரம் மருத்துவ பயன்கள், akkirakaram tamil, அக்ரஹாரம் மூலிகை