அதிக மருத்துவ குணம் கொண்ட கற்றாழை

கற்றாழை அதிக மருத்துவ குணம் கொண்ட தாவரம் ஆகும். இது உடலில் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் மருத்துவ குணத்தைக் கொண்டிருப்பதோடு உடலுக்கு பல நன்மைகளையும் அளிக்கிறது.
இது ஒரு கசப்பு தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப் பொருளாக உள்ளது. இந்தக் கற்றாழையின் மூலம் பல நோய்கள் குணமடைகின்றன.

கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதை தவிர இயற்கை ஜெல்லை பயன்படுத்தினால் நல்ல பலன் இருக்கும். முகத்தில் ஏற்படும் பருக்களை போக்க கற்றாலை பயன்படுத்தலாம். இதன் ஜெல்லை முகத்தில் தடவி வந்தால் அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் முகப்பருவை போக்கும்.
பொலிவான சருமத்தை பெற கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் பொலிவு பெறும்.வறச்சியான உதடுகளை பாதுகாக்க இரவில் படுக்கும் போது கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி வரவேண்டும் அல்லது கற்றாழை ஜெல்லை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து பயன்படுத்தினால் வறச்சியை தடுக்கும்.
கற்றாழை சாறு சிறந்த செரிமான உணவென கூறப்படுகிறது. ஒரு கப் நிறைய கற்றாழை சாறு மலச்சிக்கல் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சனைகளை நீக்க உதவும்.
கற்றாழை ரத்தச் சோகை உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் ஆயுர்வேத தயாரிப்புகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.