அம்பரலங்காயின் மருத்துவ குணங்கள்

அம்பரலங்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இதை ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இம்மரத்தின் இலைகளும் பட்டையும் மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது.

நோய் தொற்று, காய்ச்சல், தொண்டை வலி, இருமல் போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் இது கண் பார்வைத் திறனை மேம்படுத்துகிறது.

இந்த காயில் நார்ச்சத்து இருப்பதால் அஜீரணம் மற்றும் செரிமான கோளாறுகள் சரி செய்கிறது. மேலும் இது உடலில் ஏற்படும் நீர் சத்து குறைபாட்டை சரி செய்கிறது.

அம்பரலங்காய் உடல் செல்களை காப்பதால் சரும பாதிப்புகள் நீங்கி இளமையான தோற்றத்தை அளிக்கும். இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

இருமல் மற்றும் தொண்டை வலி பிரச்சனைகளுக்கு அம்பிரலங்காய் பயன்படுகிறது. ரத்தக்கசிவு, தீப்புண், வயிற்றுப்போக்கு வாயில் ஏற்படும் தொற்று, காயங்கள், கண்ணில் ஏற்படும் நோய் தொற்று போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அம்பரலங்காய் பயன்படுத்தப்படுகிறது.

இப்பழத்தில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, கலோரி ஆகியவை குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்தை தருகிறது.

மேலும் அனைத்து பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காணலாம்.