மாரிதாஸ் கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்

முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை வெளியிட்ட யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது செய்யப்பட்டார். இதற்கு பாஜக ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாரிதாஸ் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது : மதுரையில் மாரிதாஸ் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடினேன்.
கருத்துரிமையை பொருட்படுத்தாத இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். திமுகவை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை. இந்த கபட நாடகத்தை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது. என அவர் கூறியுள்ளார்.
