ரஜினியின் அண்ணாத்த படத்தில் அண்ணன் – தங்கை பாடல்

ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் உருவாகி வருகிறது. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நவம்பர் 4ம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. படத்தில் அண்ணன் – தங்கை பாசம் மிளிர வைக்கும் ஒரு அழகான பாடலும் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அதற்கான ஷூட்டிங் ஐதராபாத்தில் தான் நடந்து முடிந்திருக்கிறது.
மேலும் சில படப்பிடிப்பிற்காக இன்னும் சில தினங்களில் லக்னோ புறப்படும் படக்குழு, இம்மாத இறுதியில் தான் சென்னை திரும்புகிறது.