அரைக்கீரையின் மருத்துவ பயன்கள்

அரைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. பத்திய உணவுக்கு எவ்விதத்திலும் கெடுதல் ஏற்படுத்தாது. இந்த கீரை உடல் பலவீனத்தை போக்கும்.

அரைக்கீரையோடு பூண்டு, மிளகு, பெருங்காயம், இஞ்சி, வெங்காயம், உப்பு சேர்த்து கடைந்து சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சிறு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கீரையை சேர்த்து வரலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் சீரான வளர்ச்சி அடையும். மூளை வளர்ச்சி உண்டாகும்.

இதன் தண்டுகளை கழுவி எடுத்து பூண்டு, மிளகு, இஞ்சி சேர்த்து ரசம் செய்து சாப்பிடலாம். அரைக் கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து, நார்ச் சத்து அதிக அளவில் உள்ளது.

இந்தக் கீரையோடு சுக்கு, மிளகு, வெங்காயம், பெருங்காயம், பூண்டு, நெய் சேர்த்து உணவாக சாப்பிட்டு வந்தால் வாத சம்பந்தப்பட்ட வியாதிகள் குணப்படுத்தும்.

பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இந்த கீரையோடு பூண்டு, மல்லி, மிளகு, புளி, உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

அரைக்கீரை விதையை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவிவர தலைமுடி கருமையாகவும், செழிப்பாகவும் வளரும்.

இந்தக் கீரை சாப்பிடுவதால் தீரும் வியாதிகள்.

  • பசியின்மை.
  • நுரையீரல் வியாதிகள்.
  • வாதம்.
  • வாய்வு பிடிப்புகள்.
  • உடல் வலி.
  • குளிர் காய்ச்சல்.
  • நரம்பு பிடிப்பு.
  • வலிப்பு நோய்.
  • மாதவிடாய் கோளாறுகள்.
  • உடல் அசதி.
  • நரம்பு தளர்ச்சி.
  • அலர்ஜி.
  • மலச்சிக்கல்.

போன்ற வியாதிகள் குணமாகும்.

ஆகவே இந்த அற்புதமான அரைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

Recent Post

RELATED POST