Search
Search

சுந்தர் சி யின் அரண்மனை 3 – படக்குழு வெளியிட்ட அப்டேட்

tamil cinema news

சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சுந்தர்.சி தன்னுடைய ஸ்டைலில் காமெடி ஹாரர் திரைப்படமாக இந்த படங்களை இயக்கியிருந்தார்.

குஜராத் ராஜ்கோட்டில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் “அரண்மனை 3” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் ஆர்யா, சாக்சி அகர்வால், ராஷி கண்ணா, யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

கொரோனா மற்றும் ஊரடங்கு அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது. படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு மீண்டும் துவக்கப்பட்டது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் பொள்ளாச்சியில் நடத்தி முடித்தனர். இந்நிலையில் ‘அரண்மனை 3’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளிவந்துள்ளது.

aranmanai 3 first look poster

ஆர்யாவின் ‘டெடி’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அரண்மனை 3′ திரைப்படம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like