அரச மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்

மரங்களில் அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களில் அரசமரமும் ஒன்று. நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த பட்டமான பாரத ரத்னா பட்டம் அரச மர இலை வடிவம் கொண்டது.

அரச மரத்தின் இலை மிகச்சிறந்த மூலிகையாக கருதப்படுகிறது. இதனுடைய வேர்,பட்டை என அனைத்திலும் மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த அரசமரத்தை விநாயகர் குடியிருக்கும் வீடாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அரசமரத்தின் மருத்துவ குணங்களை பற்றி இதில் விரிவாக பார்ப்போம்.

காய்ச்சல்

அரசமர இலைகளை பாலில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் காய்ச்சல் விரைவில் குணமாகும்.

மலத்தில் ரத்தம்

அரசமரம், ஆலமரம், அத்திமரம் இந்த மூன்று மரத்தில் உள்ள கொழுந்து இலைகளை சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு காய்ச்சி சர்க்கரை கலந்து குடித்து வந்தால் மலத்தில் ரத்தம் போவது நிற்கும்.

மலட்டுத்தன்மை

அரச மரத்தின் இலையை காயவைத்து பொடி செய்து அதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும்.

ஆஸ்துமா

அரசமரத்தின் காய் மற்றும் இலைகளை காயவைத்து பொடி செய்து அதனை தண்ணீரில் கலந்து 14 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் காமாலை

இளஞ்சிவப்பான அரசமர இலைகளில் சாறு எடுத்து அதில் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலையின் பாதிப்பை தடுக்கலாம்.

வயிற்று கடுப்பு

அரசமரத்தின் கொழுந்து இலைகளை எடுத்து மை போல அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று கடுப்பு சரியாகும்.

சர்க்கரை நோய்

அரசமர காய் பொடி, கடுக்காய் பொடி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

Recent Post