தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர்.. இணைந்த அருண் ராஜா காமராஜ் – “சம்பவம்” லோடிங்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சுதீப் கிஷன் மற்றும் பிரியங்கா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். தற்பொழுது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அதிக எதிர்பார்ப்பை கொண்ட ஒரு திரைப்படம் இதுவென்றே கூறலாம்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து ஒரு போஸ்டர் வெளியானது, அதில் குறிப்பிட்டு இருந்த தகவலின்படி இந்த படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் ஜூன் மாதத்திலும், டீசர் ஜூலை மாதத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட தாடியும், சிறிய கொண்டையும், கையில் துப்பாக்கியும் ஏந்தி தனுஷ் அவர்கள் நடந்து செல்வது போல வெளியான அந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல பாடகரும், இயக்குநருமான அருண் ராஜா காமராஜ் தற்பொழுது இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.
அருண் ராஜா காமராஜ், கேப்டன் மில்லர் படத்தில், பாடல் ஆசிரியராகவும், பாடகராகவும் இணைந்துள்ளார். அரக்க சம்பவம் என்ற ஒரு பாடலை அவர் எழுதி படி உள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த பாடல் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.