Search
Search

டப்பிங்லே மிரட்டுறாரே.. நிறைவு பெற்றது மிஷன் பட படப்பிடிப்பு – ஹீரோ வெளியிட்ட ட்வீட்!

பிரபல லைகா நிறுவனம் தயாரித்து மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் படம் தான் அச்சம் என்பது இல்லையே. தற்போது இந்த திரைப்படம் மிஷன் (Mission) என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. விரைவில் இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெறித்தனமான “கம் பேக்” கொடுத்து, தமிழ் திரையுலகை கலக்கி வரும் அருண் விஜய் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் எமி ஜாக்சன் கதையின் நாயகியாக களமிறங்கியுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள ஒரு சிறைச்சாலை, அதில் உயர் அதிகாரியாக பணிபுரியும் எமி ஜாக்சன். அதே சிறையில் பிற சிறை கைதிகளை அடித்து நொறுக்கும் மற்றொரு சிறை கைதியாகவும், மகளை பிரிந்த தந்தையாகவும் நடித்துள்ளார் அருண் விஜய்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. இந்த படத்தில் வரும் ஒரு சண்டை காட்சிக்கு டப்பிங் கொடுக்கும் காணொளி ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார் நடிகர் அருண் விஜய்.

உண்மையில் பிரமிக்கவைக்கும் வகையில் அந்த டப்பிங் செஷன் அமைந்துள்ளது என்றே கூறலாம், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. AL விஜய் இயக்கத்தில் முதன் முதலில் இணைந்துள்ளார் அருண் விஜய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like