மாறுபட்ட வேடத்தில் ஆர்யா.. வெளியான காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் டீஸர்

படிப்பிலும் சுட்டி நடிப்பிலும் கெட்டி என்றால் இவரை கூறலாம், அவர் தான் ஆர்யா, தான் நடித்த முதல் படத்திலேயே Filmfare விருது பெற்ற ஒரு நல்ல நடிகர். 5 ஸ்டார் என்ற படத்திற்கு முதலில் தேர்வானார் என்றாலும் அந்த படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
2005ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தில் குட்டி என்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்திருந்தார். அதன் பிறகு உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம், ஓரம்போ என்று தொடர்ச்சியாக இவருக்கு பல வெற்றி படங்கள் கிடைத்தன.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் நடித்து வரும் ஆர்யா, டாப் நடிகர்கள் பட்டியலில் இன்றளவும் இருந்து வருகிறார். 2009ம் ஆண்டு வெளியான நான் கடவுள் திரைப்படம் அதுவரை சாக்லேட் பாயாக காணப்பட்ட ஆர்யாவிற்கு ஒரு புதிய தோற்றத்தை கொடுத்தது.
மதராசபட்டினம் திரைப்படம் அவருடைய நடிப்பு திறமையை வெளிக்கொணர்ந்தது. அவன் இவன் திரைப்படத்தில் அவருடைய புகழ் உச்சம் பெற்றது. சந்தானத்தோடு இணைந்து காமெடி கதாபாத்திரங்களும் ஏற்று நடித்து வந்த ஆர்யா தற்பொழுது காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது, முத்தையா இந்த படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் இப்போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.