அசோக மரப்பட்டை பயன்கள்

அசோக மரப்பட்டையுடன், உப்பு சேர்த்துப் பொடியாக்கி அதில் பல் துலக்கினால், பல் ஈறுகள் வலுப்படும். பல் நோய்களும் குணமாகும்.

அசோக மரப்பட்டை, மருதம் மரப்பட்டை இரண்டை-யும் சம அளவு எடுத்துப் பொடியாக்கித் தினமும் சாப்பிட்டு வந்தால், நீரழிவு, இதய நோய்கள் குணமாகும்.

அசோக மரப்பட்டையை (50 கிராம்) இடித்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு நான்கில் ஒரு பங்காகச் சுண்டவைத்து கஷாயம் காய்ச்சிக் குடித்தால், கருப்பை நோய்கள் குணமாகும்.

100 கிராம் அசோக மரப்பட்டை, 10 கிராம் பெருங்காயம் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவில் வெந்நீரில் கலந்து குடித்தால், மாதவிலக்கின்போது ஏற்படும் சூதக வலி குணமாகும்.

அசோக மரப்பட்டை (அரை கிலோ), சீரகம் (50 கிராம்) இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குணமாகும்.

அசோக மரப் பட்டையை (3 கிராம்) தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து, தினமும் மூன்றுவேளை ஒரு ஸ்பூன் அளவுக்குக் குடித்தால் மாதவிலக்கின்போது ஏற்படும். அதிகப்படியான ரத்தப்போக்கு நிற்கும்.

அசோக மரப் பட்டை, மாதுளம் வேர்ப் பட்டை, மாதுளம்பழம் மூன்றையும் சம அளவு எடுத்துக் காயவைத்துப் பொடி செய்து, தினமும் காலை மாலை இருவேளையும் மூன்று சிட்டிகை அளவுக்குத் தண்ணீரில் கலந்து குடித்தால் கருச்சிதைவு ஏற்படாது. கர்ப்பப்பை கோளாறுகளும் குணமாகும்.

5 கிராம் அசோக மரப் பட்டையைப் பொடி செய்து தினமும் பாலில் கலந்து குடித்தால் கர்ப்பப்பை கோளாறுகள் தீரும்.

அசோக மரப் பூக்களை உலர்த்திப் பொடி செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

அசோக மரப் பூ, மாம்பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து பவுடராக்கி, பாலில் கலந்து குடித்துவந்தால் சீதபேதி குணமாகும்.