“அத்தன பேரு மத்தியில”.. இன்று மாலை வெளியாகும் பாடல் – இராவண கோட்டம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனது தந்தையின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பிறகு கதையின் நாயகனாக உருவெடுத்து, நல்ல முறையில் வளர்ந்து வரும் ஒரு நடிகர் தான் சாந்தனு பாக்யராஜ். நடனம், நடிப்பு என்று நேர்த்தியான பல திறமைகளை கொண்ட நல்ல நடிகர்.
இருப்பினும் சாந்தனுவிற்கு கடந்த சில ஆண்டுகளாகவே, பிரேக் கொடுக்கும் அளவிற்கு பெரிய அளவில் ஒரு நல்ல திரைப்படம் அமையவில்லை என்று தான் கூற வேண்டும். மாஸ்டர் படத்தில் இவர் ஏற்று நடித்த பார்கவ் என்ற கதாபாத்திரமும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் இராவண கோட்டம். வரும் மே மாதம் 12ம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
படம் மே 12ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இராவண கோட்டம் படத்திலிருந்து இன்று மாலை “அத்தன பேரு மத்தியில” என்ற வீடியோ பாடல் ஒன்றை பிரபல நடிகர் ஜெயம் ரவி வெளியிட உள்ளார்.