Search
Search

சுவையான கொங்குநாடு பொடி உருளைக்கிழங்கு ரோஸ்ட்

தேவையான பொருட்கள்

பேபி உருளைக்கிழங்கு – ½ கிலோ
பருப்பு பொடி – 7 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ½ டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ டேபிள் ஸ்பூன்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
நறுக்கிய பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை போட்டு வேக வைத்து பிறகு தோலை உரிக்கவும். வேக வைத்த கிழங்கை இரண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடவும். பிறகு அதில் ஊறவைத்த புளியை கரைத்து 4 டேபிள் ஸ்பூன் அளவுக்கு ஊற்றவும்.

கொடுக்கப்பட்டுள்ள பருப்பு பொடி, கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளித்து அதில் பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு ரோஸ்ட் பதம் வரும் வரை வறுத்து இறக்கவும்.

Leave a Reply

You May Also Like