பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் அடுத்தடுத்து இரண்டு படங்கள்.. கலக்கும் லோகேஷ் கனகராஜ்!

தமிழ் சினிமாவின் தற்போதைய உச்சபட்ச ஸ்டார் இயக்குநராக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ் என்பதை நாம் மறுக்க முடியாது. கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என்று தொடர் வெற்றிகளை கொடுத்து, ஸ்டார் இயக்குநர் தரத்திற்கு உயர்ந்துள்ளார் அவர்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் இணைய உள்ளார் லோகேஷ் கனகராஜ். ஸ்டண்ட் இயக்குநர்களான அன்பு மற்றும் அறிவு ஆகிய இரட்டையர்களுடைய இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளார்.
இந்த படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட உள்ளது, மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய 171வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்க இருக்கிறார் என்பதை நாம் அறிவோம், அந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வெளியிட உள்ளது.
ஆகவே இரு படங்கள் தொடர்ச்சியாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் அவர் இணையவுள்ளார். ஏற்கனவே லியோ படத்தில் மிகவும் பிசியாக இருந்து வரும் லோகேஷ்க்கு, மேலும் இரண்டு படங்கள் லைனில் உள்ளது அவருடைய ரசிகர்களை அதிக அளவில் குஷிபடுத்தி உள்ளது.