Search
Search

வாழைப் பூ உருண்டை குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை

வாழைப்பூ – 1
துவரம் பருப்பு – 100 கிராம்
கடலை பருப்பு – 4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கடுகு வெந்தயம் – தாளிக்கசாம்பார் தூள் – 2 ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

வாழைப் பூவை ஆய்ந்து நறுக்கி கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வாழைப் பூவை வதக்கவும்.

துவரம் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் 1 மணி நேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்து கொள்ளவும். அதனுடன் வாழைப்பூ, உப்பு சேர்த்து உருண்டைகளாக பிசைந்து கொள்ளவும். பிறகு அதை ஒரு இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.

புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து சாம்பார் தூள் சிறிது சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு வேக வைத்த உருண்டைகளை போட்டு கொதிக்க வைத்து இறக்கி விடவும்.

மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து குழம்பில் சேர்க்கவும். சுவையான வாழைப்பூ உருண்டை குழம்பு ரெடி.

Leave a Reply

You May Also Like