தோல் பளபளப்பாக மாறனுமா..? வாழை இலை போதும்..!

நம் பாரம்பரியமான பழக்கங்களில் மிகவும் முக்கியமானதாக இருப்பது வாழை இலை. எந்த விசேஷமாக இருந்தாலும், வாழை இலை முக்கிய பங்கு வகிக்கும். இந்த வாழை இலையின் சிறப்புகள் பற்றியும், அதனால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் பற்றியும் தற்போது நாம் பார்க்கலாம்.

வாழை இலை பற்றிய பலரும் அறியாத தகவல்கள்:

  1. சாப்பாடு கொட்டுப் போகாமல் இருப்பதற்கும், சமைத்த அதே மனத்தோடு இருப்பதற்கும் வாழை இலையின் மூலம் பார்சல் கட்டிக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால், நீண்ட நேரமானாலும், சாப்பாடு கெட்டுவிடாது.
  2. தற்போதைய காலங்களில் பலருக்கும், சிறிய வயதிலேயே நரைகள் தென்பட ஆரம்பித்துவிடுகிறது. ஆனால், தொடர்ச்சியாக வாழை இலை சாப்பிட்டு வந்தால், நீண்ட நாட்களுக்கு, நரை முடி வராவே வராது.
  3. தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழை இலை மீதுதான் படுக்க வைக்க வேண்டும். அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
  4. சொரியாசிஸ், தோல் அழற்சி மற்றும் கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையைக் கட்டி வைத்தால் விரைவில் குணமாகும்.
  5. தோல் பளப்பளவென மாறுவதற்கு, தினமும் வாழை இலையில் சாப்பாடு சாப்பிடு வருவது நல்ல பயனை தரும். கண்ட கண்ட க்ரீம்களுக்கு செலவு செய்வதற்கு பதிலாக, வாழை இலையை பயன்படுத்துங்கள், விலை மிகவும் குறைவு தான்.
  6. வலிமைக் குறைவாக இருத்தல், மந்தமாக செயல்படுதல், சிறிய அளவிலான வேலை செய்தாலே அதிகமாக இளைப்பு ஏற்படுதல், போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களும், வாழை இலையில் உணவு சாப்பிட்டு வந்தால், அனைத்தும் சரியாகி விடும்.
  7. வாழை இலையில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சைத் தன்மை, உணவுப் பொருட்களை விரைவில் ஜீரணமாக்கிவிடும் தன்மைக் கொண்டது. அதுமட்டும் இன்றி, வயிற்று புண் இருந்தாலும், இவை அனைத்தும் சரியாகிவிடும்.

ஒரு காலத்தில் தினம்தோறும் வாழை இலைகளில் சாப்பிட்டு வந்த தலைமுறை நாம். அதற்கு பிறகு, விசேஷ காலங்களில் மட்டும் சாப்பிட்டு வந்தோம். ஆனால், இப்போது, கம்ப்யூட்டர் இலைகளை பயன்படுத்தி வருகிறோம். யாரை ஏமாற்றுவதற்காக கம்ப்யூட்டர் இலைகளை சாப்பிடுகிறோம் என்று புரிவதில்லை. எனவே, இன்று முதல் நம் பழைய கலாச்சாரங்களை மீட்டெடுப்போம்.