ருசியான வாழைப்பழம் குழிப்பணியாரம் செய்யும் முறை

தேவையான பொருட்கள்

பெரிய வாழைப்பழம் – ஒன்று
காய்ந்த திராட்சை – ஒரு டேபிள் ஸ்பூன்
உடைத்த முந்திரி – ஒரு டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு – ஒரு கப்
வறுத்த ரவை – கால் கப்
அரிசி மாவு – கால் கப்
நெய் – சிறிதளவு
துருவிய வெல்லம் – ஒரு கப்
ஏலக்காய் – 4
முந்திரி திராட்சை – சிறிதளவு

செய்முறை

வாழைப்பழத்தை தோல் உரித்து நன்றாக மசித்துக்கொள்ளவும். வெல்லத்தை நீர் விட்டு பாகு போல் காய்ச்சவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, அரிசி மாவு, ஏலக்காய், முந்திரி, திராட்சை, மசித்த வாழைப்பழம், வெல்லம் பாகு ஆகியவற்றை ஊற்றி கரைக்கவும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து குழிப்பணியாரக் கல்லை வைக்கவும். நன்கு சூடான பிறகு குழியில் மாவை ஊற்றவும் அது நன்றாக வெந்து உப்பி வரும். அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும். பிறகு கம்பியால் பணியாரத்தை திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் வாழைப்பழம் குழிப்பணியாரம் ரெடி. இது உடலுக்கு மிகவும் நல்லது.

Recent Post