பேட்டரி திரை விமர்சனம்
இயக்குனர் மணி பாரதி இயக்கத்தில் செங்குட்டுவன், அம்மு அபிராமி, தீபக் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்டரி’. சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சென்னையில் அடுத்தடுத்து சில கொலைகள் நடக்கின்றன. அந்த கொலைகள் அனைத்தும் ஒரே விதமாக செய்யப்படுகின்றன. ஆனால் அதற்கு தடயங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் நாயகன் செங்குட்டுவன் சப்-இன்ஸ்பெக்டராக புதிதாக பதவியேற்கிறார். பிறகு குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக விசாரணையில் இறங்குகிறார் செங்குட்டுவன்.
ஒரு கட்டத்தில் உதவி கமிஷனரும் அந்த விசாரணையில் இறங்குகிறார். இறுதியில் குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நாயகன் செங்குட்டுவன் முதல் படத்திலேயே மிரட்டலான நடிப்பை கொடுத்து அசத்தியுள்ளார். ஆக்சன் காட்சிகளிலும் அதிரடி காட்டி இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். வில்லன்களாக வரும் நாகேந்திர பிரசாத், அபிஷேக் இருவருக்கும் அதிக முக்கியத்துவம் இல்லை. எம்.எஸ் பாஸ்கர் தனது அனுபவ நடிப்பால் அசத்தியுள்ளார்.
சித்தார்த் விபினின் பின்னணி இசை பெரிதாக கவரவில்லை. வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்த இயக்குனர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் பேட்டரி – சார்ஜ் கொஞ்சம் குறைவுதான்.
