பீன்ஸ் கொடுக்கும் பயன்கள் என்ன?

காய்கறிகள் அனைத்தும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியது. ஒவ்வொரு காய்கறிக்கும், ஒவ்வொரு மருத்துவ குணம் உண்டு. அதேபோல், இப்பொழுது பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு பார்ப்போம்.

மலச்சிக்கல்

நாம் சாப்பிட்ட உணவு நன்றாக செரிக்க வேண்டும் என்றால் உடலில் செரிமான அமிலங்கள் நன்றாக சுரக்க வேண்டும். அதற்கு தினமும் பீன்ஸ் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட்டால் நன்கு செரிமானமாகி உடல் ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

உடல் எடையை குறைக்க

எடையை குறைக்க விரும்புவர்கள் தேவையற்ற உணவுகளை தவிர்த்து சற்று உடற்பயிற்சியோடு அதிகமாக பீன்ஸ் காய்கறியை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்களை பீன்ஸ் கொடுத்துவிடும். தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் தன்மை இதற்கு உண்டு

நோய் எதிர்ப்பு சக்தி

உங்களுக்கு எதிர்ப்பு சக்தி என்பது மிக மிக அவசியம். வயதாகும்போது சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதற்கு, பீன்ஸ் காயினை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள அது இரத்தத்தில் கலந்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

நார் சத்து

மாமிசம் மற்றும் வறுக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை சீரணிக்க செரிமான உறுப்புகள் அதிகம் வேலை செய்கின்றன. அதற்கு நார்சத்து அதிகமுள்ள பீன்ஸ் அடிக்கடி எடுத்துக் கொண்டால் செரிமான உறுப்புகளை பாதுகாக்கும்.

இதயத்தை பாதுகாக்கும்

இதய நோயாளிகள் இயற்கையான பழங்கள் காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. பீன்ஸ் காய்கறியும் இதயத்திற்கு செல்லும் நரம்புகளை வலுப்படுத்தி ரத்தம் சீராக செல்வதற்கு வழிவகுக்கிறது. இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

கர்ப்பிணி பெண்கள்

குழந்தை பிறந்த பிறகு கர்ப்பிணிப் பெண்களுக்கு உடலுக்கு தேவையான சத்தினை பீன்ஸ் கொடுக்கிறது. உடல் சோர்வடையாமல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

ரத்த ஓட்டம்

பீன்ஸ் ரத்த ஓட்டத்தை சீராக்கி உடம்பு ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவி புரிகிறது. ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைபட்ட நீக்கி ரத்தசோகையை குணப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் இருக்கும் நச்சுப் பொருள்களையும் நீக்கி, சுத்திகரிப்பு செய்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

எலும்புக்கு ஆரோக்கியம்

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் கால்சியம் சத்து சிறிதளவு பீன்ஸில் இருப்பதால் இது எலும்புகளை பாதுகாக்கும். மேலும் சுண்டைக்காய் குழம்பு வைத்து சாப்பிடுவது எலும்புக்கு நல்லது.

Recent Post