மீன் சாப்பிடுவதால் நீண்ட காலம் உயிர் வாழலாம்

மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன.

மீனில் ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் (Omega 3 Fatty acid) இருப்பதால் கேன்சர், இதய கோளாறுகள் வராமல் தடுக்கிறது. மீன் சாப்பிடுவதன் மூலம் அதிக நாட்கள் உயிர்வாழ முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்க (Omega 3 Fatty acid) உதவுகிறது.

மீனில் பல சத்துக்கள் உள்ளது. மீன்களில் அதிக அளவு புரத சத்து இருப்பதால் உடலுக்கு மிகுந்த நன்மை தருகிறது. மேலும் உடல் எடையை குறைக்க இது உதவுகிறது.

மீனில் வைட்டமின் D இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்கும்.

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..!

மீன் சாப்பிடுவதன் மூலம் நமக்கு பொட்டாசியம், சோடியம், மேங்கனீஸ் போன்ற தாதுக்கள் நம் உடலுக்கு கிடைக்கிறது.

தினமும் மீன் சாப்பிடுவதனால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளை தடுக்கிறது.

மீன் சாப்பிடுவதால் கண் நோய் வராமல் தடுப்பதுடன் பார்வை திறனை அதிகரிக்க இது உதவுகிறது.