Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

திருப்பதி ஏழுமலையானை இப்படி வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும்

ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையானை இப்படி வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும்

ஆந்திர மாநிலத்தில் சிறப்பு திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இந்த கோவிலுக்கு தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம்.

நாம் திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும் என்று நினைத்தால் நேராக திருமலை மீது உள்ள பெருமாளை தரிசிப்பது வழக்கம். ஆனால் பெருமாளை தரிசிப்பதற்கு முன் வேறு சில கடவுள்களை வணங்கிய பிறகு திருமாலை வழங்கவேண்டுமென ராமானுஜர் வகுத்துள்ளார்.

முதலில் கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜப் பெருமாளை வணங்க வேண்டும்.

அதன்பிறகு அலமேல் மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை வணங்கி அருள் பெற வேண்டும்.

மூன்றாவதாக வராக தீர்த்தக்கரையில் உள்ள வராக மூர்த்தியை தரிசிக்க வேண்டும்.

அதன் பிறகுதான் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வேண்டும்.

இந்த முறையை பின்பற்றி வணங்கினால் முழு பலனும் நமக்கு கிடைக்கும். இந்த வழிமுறையை நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இந்த வழிமுறை இராமானுஜர் காலத்தில் தொடங்கப்பட்டு இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

திருப்பதியில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்

தலக்கோணம் நீர்வீழ்ச்சி

தலக்கோணம் நீர்வீழ்ச்சி ஆந்திராவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். இதன் உயரம் 270 அடி. இது இந்தியாவின் சிறந்த நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்த நீர்வீழ்ச்சியை காண சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மலையேற வேண்டும். மேலும் இங்கு படகு சவாரி, கயிறு ஏறுதல் போன்ற பொழுது போக்கு அம்சங்களும் உள்ளது.

ஸ்ரீவாரி அருங்காட்சியகம்

திருப்பதி கோவில் வளாகத்தில் எதிரே உள்ள இந்த அருங்காட்சியகம் 1.25 லட்சம் சதுரடி பரப்பளவில் உள்ளது. திருப்பதியில் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஸ்ரீகாளகஸ்தி

திருப்பதியில் இருந்து சுமார் 38 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ராகு மற்றும் கேதுவுடன் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது. கோவில் நகரமான திருப்பதியில் உள்ள பல இடங்களை விட இந்த இடம் மிகவும் முக்கியமானது.

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர்

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் தோன்றியதே அந்தக் கிணற்றில்தான்!இன்றும் அதே கிணற்றின் மேல்தான் அவர் காட்சி தருகிறார். இந்த கோவில் பழமையான கோவில்களில் ஒன்றாகும். தற்போது பக்தர்கள் சிலையின் அடிவயிறு வரை மட்டுமே பார்க்க முடியும். இக்கோவில் அதிகாலை 4:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடை திறக்கப்படும்.

சீனிவாச மங்காபுரம்

திருப்பதியிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வெங்கடேஸ்வரரின் மிக புனிதமான கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திருப்பதி அருகே கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இந்த கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top