Search
Search

சருமத்தை அழகாக வைத்திருக்க உதவும் சிறந்த 5 பழங்கள்

skin care food tips

சருமம் அழகாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இதற்காக க்ரீம், ஃபேஷியல், ஃபேஸ் வாஷ் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சிலர் அழகு நிலையங்களுக்குச் சென்று, நிறைய பணம் செலவழிப்பார்கள். இதன் காரணமாக விரைவிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது.

இதற்கு சிறந்த தீர்வு இயற்கை வழிதான். சருமத்தை பொலிவாக வைத்திருக்கும் சிறந்த 5 பழங்கள் பற்றி பாப்போம். இது உடலுக்கு மட்டும் அல்ல. உங்கள் சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும்.

skin care food tips

ஆரஞ்சு

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் உடலுக்கும் சருமத்திற்கும் பல நன்மைகள் தரும். ஜூஸ் போட்ட பிறகு ஆரஞ்சு தோலை தூக்கி போட வேண்டாம். அதன் தோலை முகத்தில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து கழுவினால் சருமம் பொலிவுடன் இருக்கும்.

மாதுளை

அதிக சத்துக்களை கொண்டுள்ள மாதுளை சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும் முடியை ஆரோக்கியமாக பாதுகாக்க தினமும் மாதுளை பழச்சாறு எடுத்துக் கொள்வது நல்லது.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். இதில் உள்ள டானின் மற்றும் பெக்டின் என்னும் பொருட்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. ஆப்பிளை மசித்து சிறிது தேன் கலந்து முகத்திற்கு தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி, சருமத்தில் இருக்கும் மெலனின் அளவை குறைக்கிறது.

பப்பாளி

முகப்பரு உள்ளவர்களுக்கு பப்பாளி நல்ல தீர்வை தரும். சருமத்தை பொலிவாக்குவதில் பப்பாளி முக்கிய பங்கு வகிக்கிறது. பப்பாளியில் உள்ள நொதியானது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை எளிதாக நீக்கிவிடும். பப்பாளியின் சதைப் பகுதியை எடுத்து, சருமத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்த பிறகு கழுவி வந்தால், முகம் பொலிவோடு இருக்கும்.

ஆப்ரிக்காட்

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு ஆப்ரிக்காட் சிறந்த பலனை தரும். இதில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும். 2 ஆப்ரிக்காட் பழங்களை மசித்து அதில் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

You May Also Like