“கிறங்கடிக்கும் கண்கள் இது” : சாக்ஷி அகர்வால் போட்டோஷூட் – வர்ணிக்கும் நெட்டிசன்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்து, எம்பிஏ முடித்து அதன் பிறகு பல முன்னணி ஐடி நிறுவனங்களில் வேலை பார்த்த பிறகு சினிமா மீது கொண்ட ஆசையால் நடிக்க தொடங்கிய நடிகை தான் சாக்ஷி அகர்வால். 2013ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் இவர் தோன்றிய ஒரே ஒரு காட்சி, இவரை பற்றி பெரிய அளவில் பேசவைத்து என்றே கூறலாம்.
ராஜா ராணிக்கு பிறகு கன்னட மொழியில் ஒரு படத்தில் நடித்த இவர் அதன் பிறகு தமிழில் தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க தொடங்கினார். 2018ம் ஆண்டு வெளியான பா. ரஞ்சித்தின் காலா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக இவர் நடித்திருந்தார்.
அதன் பிறகு விசுவாசம், அரண்மனை 3, நான் கடவுள் இல்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். தற்பொழுது இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் பகிரா.
மாறுபட்ட வேடத்தில் “தமிழகத்தின் மைக்கேல் ஜாக்சன்” பிரபுதேவா நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியதாக பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மேலும் இந்த 2023ம் ஆண்டில் சுமார் ஆறு திரைப்படங்கள் சாக்ஷியின் நடிப்பில் வெளிவர காத்திருக்கிறது.
அவ்வப்போது பல போட்டோ ஷூட்களை எடுத்து வெளியிடும் இவருக்கு ட்விட்டர் தளத்தில் ரசிகர்களின் அதிகம். தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள போட்டோ சூப்பர் ஒன்று வைரலாகி வருகிறது.