பூமி சினிமா விமர்சனம்

ரோமியோ ஜூலியட், போகன் படத்தை இயக்கிய லக்ஷ்மன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, நித்தி அகர்வால், சதீஷ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீப காலமாக பல இயக்குநர்களும் விவசாயம் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள நிலையில் பூமி படத்தில் விவசாயத்தை கையில் எடுத்துள்ளனர். விவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ற அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
நாசாவில் பணிபுரியும் பூமிநாதன் (ஜெயம் ரவி) விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு செல்கிறார். அங்கு கார்ப்பரேட் நிறுவனத்தின் சதியால் விவசாயிகள் படும் துயரத்தை பார்த்து அங்கேயே தங்குவதற்கு முடிவு செய்கிறார்.
சொந்தமாக விவசாயம் செய்ய விடாமல் கார்ப்பரேட் நிறுவனம் தடுக்கிறது. அதனை ஜெயம்ரவி எப்படி முறியடித்தார். விவசாயிகளின் வாழ்கை என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தில் முதல் 15 நிமிடத்தில் இரண்டு பாடல்கள் வந்து விடுகிறது . அதன் பிறகுதான் விவசாயிகள் பிரச்சனையை கையில் எடுக்கிறார் இயக்குனர்.
கார்பரேட்டுக்கு எதிரான கருத்து சொல்லும் படத்தை கார்பரேட் கைவசம் இருக்கும் ஓடிடியில் வெளியாகியிருப்பது தான் வேடிக்கை.
ஏற்கனவே பல முறை கேட்ட வசனங்கள் மீண்டும் மீண்டும் ஒலிப்பதால் படம் பார்க்கும் போது அலுப்பு தட்டுகிறது.
படத்தில் கதாநாயகி (நித்தி அகர்வால்) தேவையில்லை என்று தோன்றுகிறது. அவருக்கு சொல்லும்படி கதாபாத்திரம் இல்லை. மற்றவர்கள் யாருக்கும் பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பில்லை.
நம்பக்கூடிய வகையில் திரைக்கதை இல்லாமல் போனதால் படம் பெரும் ஏமாற்றமளிக்கிறது.