என்ன அரசியலுக்குள் இழுக்காதீங்க.. தாங்கமாட்டீங்க – பிக் பாஸ் பிரபலம் ட்வீட் : நெட்டிசன்கள் போடும் பதில் ட்வீட்

பாலாஜி முருகதாஸ் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக மிகவும் பிரபலமடைந்தவர். சில தினங்களுக்கு முன்பு இவர் போட்ட ட்வீட் ஒன்று தற்பொழுது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 25ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை டேக் செய்து ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில் அன்புள்ள தமிழ்நாடு முதல்வர் அவர்களே தயவு செய்து டாஸ்மாக்களை மூடுங்கள், ஏனெனில் இது ஆன்லைன் ரம்மியை ஒப்பிடும் போது அதிக அளவிலான மக்களை மற்றும் அவர்களுடைய குடும்பத்தை நாசம் செய்கிறது என்று கூறினார்.
இந்நிலையில் இவர் போட்ட டீவீட்டுக்கு கடுமையான பல எதிர்ப்புகள் வெளிவந்தது, மேலும் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவருடைய ரசிகர் ஒருவர், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு நீங்கள் செய்த விஷயம் என்ன என்று கேட்ட டீவீட்டுக்கு “நான் ஒரு சில பீர்களை குடித்துவிட்டு மட்டன் பிரியாணி சாப்பிட்டேன் என்று பதில் அளித்த டீவீட்டை screen shot எடுத்து போட்டு அவரை விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மார்ச் 26ம் தேதி அவர் மீண்டும் வெளியிட்ட டீவீட்டில் குடியால் குடும்பத்தை இழந்து அனாதையாக இருப்பவர்களின் நானும் ஒருவன். என்னை அரசியலுக்குள் இழுக்காதீர்கள் இழுத்தால் தாங்க மாட்டீர்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.