உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க சில டிப்ஸ்

வேலை பளு, மனஅழுத்தம் காரணமாக நமது உடலில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தையும் தீர்வையும் பாப்போம்.

மாரடைப்பு, வாதம் போன்ற நோய்களுக்கு “ஹைபர் டென்ஷன்” என்னும் நோய் காரணமாகிறது. இதனுடைய அறிகுறிதான் உயர் ரத்த அழுத்தம். ஆகவே ரத்த அழுத்தத்தை சரியான விகிததில் வைத்து கொள்வதற்கு சீரான உணவு கட்டுப்பாடு அவசியம்.

ரத்த கொதிப்பு உள்ளவர்கள் வேண்டிய உணவுகள்

Advertisement

ஆல்க்கஹால். காஃபி, டீ உள்ளிட்ட பானங்களை முடிந்தவரை குறைப்பது நல்லது.

சிகரெட்டின் உள்ள நிக்கோட்டின், மதுவில் உள்ள ஆல்கஹால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆகையால் சிகரெட், மது இரண்டையும் முழுவதுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை, உப்பு, காரம் அனைத்தையுமே குறைப்பது நல்லது.ஒரு நாளில் சராசரி 2.5மிகி அளவு உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

உப்பை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது அதில் உள்ள சோடியம் தமனிகள், மூளை, சிறுநீரகம், இதயம் போன்றவை பாதிக்கிறது.

அதிகமான சோடியம் உட்கொள்ளளால் இதயத்திற்கு இணையும் இரத்தக் குழாய்கள் பாதிப்படைகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டாகிறது.