எலான் சார்.. இப்படி பண்ணலாமா? மறையும் நடிகர் நடிகைகளின் ப்ளூ டிக்!

சினிமாத்துறையை பொறுத்தவரை முன்பெல்லாம் ஒரு அப்டேட் வரவேண்டும் என்றால் அது மிகவும் கடினம். திரைத் துறையை சார்ந்த நடிகர், நடிகைகளோ அல்லது அவர்களின் மக்கள் தொடர்பு பணியில் இருப்பவர்களோ ஊடகம் மூலமாக சொன்னால்தான் உண்டு.
ஆனால் இந்த டிஜிட்டல் உலகில் அப்படி இல்லை, சமூக வலைத்தளங்களின் ஆட்சி நடப்பதால், நொடிப் பொழுதில் ஒரு விஷயத்தை உலகறிய செய்யமுடியும். அந்த வகையில் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பரவலாக பயன்படுத்துவது ட்விட்டர் தான்.
இந்நிலையில் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல மாற்றங்கள், குறிப்பாக அந்த பறவைக்கு பதிலாக நாய் வந்தது மற்றும் ப்ளூ டிக் சேவைக்கு காசு பிடிக்கப்பட்டது என்று கூறலாம். ஆனால் கடந்த சில நாட்களாக சில உச்ச நட்சத்திரங்களின் ட்விட்டர் கணக்குகளின் ப்ளூ டிக் மாயமாகி வருகின்றது.
படத்தின் ப்ரமோஷனுக்காக பெயரை மாற்றிய நிலையில் ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஆகியோரின் ப்ளூ டிக் எடுக்கப்பது. இந்நிலையில் பிரபல நடிகை குஷ்பு மற்றும் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரின் ப்ளூ டிக்களும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது என்பது எலான்னுக்கு தான் வெளிச்சம்.
அப்டேட் செய்யப்பட்ட தகவல் : தற்போது இந்த லிஸ்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தளபதி விஜய், நடிகர் சூரி என்று தொடர்ந்து பலரின் ப்ளூ டிக் மாயமாகி வருகின்றது.