Search
Search

12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மிகப்பெரிய நிறுவனம் திட்டம்

boeing

அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான போயிங் நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். அதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விமானங்கள் வடிவமைப்பு, விமான உற்பத்தி, ராக்கெட் தயாரிப்பு, தொலைதொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்யும் ஒரு மிகப்பெரிய நிறுவனம்தான் இந்த போயிங் நிறுவனம்.

2018 ஆம் ஆண்டு வருவாயின் அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனம் ஆகும். இப்படிப்பட்ட மிகப்பெரிய நிறுவனம் கொரோனா காரணமாக பயணத்துறை முற்றிலும் முடங்கிப் போயுள்ள நிலையில் பெருத்த அடி வாங்கியுள்ளது.

boeing

இதன்காரணமாக 12 ஆயிரம் ஊழியர்களை குறைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளாதக கூறப்படுகிறது. அமெரிக்காவின் கொரோனா உச்சம் கொண்டுள்ள நிலையில் அங்கு விமான போக்குவரத்து 96 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English : Boeing cutting more than 12,000 US jobs, thousands more planned

Leave a Reply

You May Also Like