Search
Search

கால்சியம் அதிகம் உள்ள 7 உணவு வகைகள்

calcium rich foods list in tamil

ஆரோக்கியமான உடலுக்கு கால்சியம் சத்து மிக அவசியம். நமது உடலில் கால்சியம் சத்து குறைந்து விட்டால் முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு, நகம், பற்கள் என பாதிப்புகள் உருவாகும். பெண்களுக்கு 1,300 மில்லி கிராம் கால்சியமும் ஆண்களுக்கு 1000 மி.கி கால்சியமும் தேவைப்படுகிறது.

எந்தெந்த உணவுகளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது என்பதை இதில் பாப்போம்.

பசலைக்கீரை

பெரும்பாலான கீரை வகைகளில் கால்சியம் உண்டு. பசலைக்கீரையில் சற்றுக் கூடுதலாக இருக்கும். தினமும் கீரைச் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. வாரத்திற்கு இரு முறையாவது புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை துவையல் சாப்பிட வேண்டும்.

மணத்தக்காளி கீரை

மணத்தக்காளி கீரையைக் கூட்டாகவோ, துவையலாகவோ செய்து சாப்பிட்டால் கால்சியம் சத்து அதிகமாக கிடைக்கும்.

calcium rich foods list in tamil

எள்

எள் சாப்பிடும் பழக்கம் வழக்கொழிந்து வருகிறது என்றே சொல்லலாம். எள் உருண்டை செய்து சாப்பிடலாம். எள்ளைப் பொடி செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். எள்ளில் நிறைய கால்சியம் சத்து இருக்கிறது. எள்ளிலிருந்து எடுக்கும் எண்ணெய்தான் நல்லெண்ணெய்.

உலர் அத்திப்பழம்

உலர் அத்திப்பழம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். தினமும் இரண்டு வில்லைகள் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் வராது. மேலும் கால்சியம் சத்து அதிகமாக கிடைக்கும்.

பீன்ஸ்

பீன்ஸில் கால்சியம் (calcium) சத்து நிறைந்துள்ளது. மேலும் இரும்பு, மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் செரிமானக்கோளாறுகள் நீங்கும்.

வெங்காயத்தாள்

உணவில் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் வெங்காயத்தாளில் கால்சியம் (calcium), பொட்டாசியம் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இதனை காய்கறி சூப் முட்டை ஆம்லெட் போன்றவற்றுடன் கலந்து சாப்பிடலாம்.

வெண்டைக்காய்

100 கிராம் வெண்டைக்காயில் 81 மில்லிகிராம் கால்சியம் (calcium) உள்ளது. இரும்புசத்து, பாஸ்பரஸ், மாங்கனீசு, செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவை உள்ளது. வெண்டைக்காயில் உள்ள பெக்டின் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கிறது.

இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள உணவுகள்

Leave a Reply

You May Also Like