Search
Search

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

elakkai benefits in tamil

ஏலக்காய் பார்ப்பதற்கு சிறிய அளவில் இருந்தாலும் அதன் மருத்துவ குணம் பெரியது. இந்திய சமையல் கலையில் ஏலக்காய்க்கு முக்கிய இடமுண்டு. தினமும் நாம் ஒரு ஏலக்காய் உணவில் சேர்த்துவந்தால் உடலுக்கு பல நன்மைகள் அளிக்கும்.

ஏலக்காயில் கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய் என இரண்டு வகை உள்ளது. இதில் அதிகம் பயன்படுத்தப்படுவது பச்சை ஏலக்காய் தான்.

ஏலக்காய் வாயுத் தொல்லையை நீக்கி ஜீரண சக்தியை அளிக்கிறது. மேலும் நல்ல ப‌சி எடு‌க்கு‌ம்.

ஏலக்காய் பற்களில் உள்ள கிருமிகளை நீக்கி வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.

ஏலக்காயை கசாயம் செய்து பருகினால் ஜலதோஷம், இருமல், தும்மல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

அஜீரண கோளாறு உள்ளவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம்.

நெஞ்சு சளியால் அவதிப்படுபவர்களுக்கு ஏலக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

ஏலக்காயை தேநீர் அல்லது பாயாசத்தில் சேர்த்து சாப்பிட்டால் சுவையாகவும் மணமாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

விரைப்புத்தன்மை கோளாறால் அவதிப்படும் ஆண்களுக்கு ஏலக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஏலக்காயில் உள்ள சினியோல் ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

ஏலக்காயை அடிக்கடி தேநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்க உதவும். மேலும் நரம்பு தளர்ச்சி சரியாகி நரம்புகள் வலுபெறும்.

மேலும் அனைத்து விதமான மூலிகைகள் அதன் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

You May Also Like