திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை – நீதிமன்றம் உத்தரவு!

திருச்செந்தூரை சேர்ந்த சீதாராமன் என்பவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள், பக்தர்கள் செல் போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் “திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி செல்போன் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.
இது குறித்து ஒரு வாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்றும் உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதேபோலவே கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை விதிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.