கொரோனா நோயாளிகளுக்கு புதிய மருந்து..! மத்திய அரசின் அடுத்த பிளான்..!
கொரோனா வைரஸ், தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.
இதன்கோரடிப்பிடியில் இருந்து மீள்வதற்கு, மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், இன்னும் மருந்து பிடிக்கவில்லை. இதனால், தற்போதைக்கு, சில வகை மருந்துகளை மத்திய அரசு அளித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் புதிய மருந்தை மத்திய சுகாதார துறை சேர்த்துள்ளது. இந்த மருந்தின் பெயர், டெக்ஸாமெத்தாசோன் என்பதாகும்.
இந்த மருந்தை மிதமான மற்றும் நோய் தீவிரமான நிலையில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.