Search
Search

சாந்தினியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் – இவ்வளவு கவர்ச்சி அவசியமா? நெட்டிசன்கள் கேள்வி

கே. பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சிந்து +2. கடந்த 2010ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் மூலம் அறிமுகமான நாயகி தான் சாந்தினி தமிழரசன். சாந்தினி தமிழரசன் சென்னை நுங்கம்பாக்கத்தில் பிறந்தவர்.

சிறு வயது முதலே அழகி போட்டிகளில் கலந்துகொண்டு வரும் இவர் “மிஸ் சென்னை” பட்டத்தை கடந்த 2007ம் ஆண்டு வென்றார், அப்போது இவருக்கு வயது 17. சித்து +2 படத்திற்கு பிறகு பிரித்திவி ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான நான் ராஜாவாக போகிறேன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு வசனங்களை எழுதியது வெற்றிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு காலிச்சரன், லவ்வர்ஸ் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் இவர் நடிக்க தொடங்கினார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இறுதியாக மைடியர் லிசா என்ற படத்தில் தோன்றியவர், மாயத்திரை என்ற படத்திலும் நடித்ததாக கூறப்பட்டது. தற்பொழுது பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சாந்தினி தமிழரசன் உச்சகட்ட கவர்ச்சியோடு ஒரு போட்டோ ஷூட் ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு கவர்ச்சி இப்போ அவசியம்தானா என்று கேட்டுவருகின்றனர்.

You May Also Like