Search
Search

மீண்டும் களமிறங்கும் இயக்குநர் சேரன் – இவர் இயக்கப்போகும் “சூப்பர் ஸ்டார்” யார் தெரியுமா?

பாரதி கண்ணம்மா என்ற அழகிய திரை காவியத்தின் வழியாக ஒரு இயக்குநராக தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் தான் சேரன். புரியாத புதிர், சேரன் பாண்டியன் மற்றும் சூரியன் சந்திரன் போன்ற படங்களில் ஐயா கே.எஸ் ரவிக்குமார் அவர்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தவர்.

அதன் பிறகு 1997ம் ஆண்டு தான் இவருடைய முதல் திரைப்படமான பாரதி கண்ணம்மா வெளியானது, அதைத் தொடர்ந்து போர்க்களம், வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து என்று இவர் இயக்கி வெளியிட்ட படங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

நான்கு முறை தேசிய விருது பெற்ற ஒரு மாபெரும் கலைஞர், மேலும் தமிழ்நாடு அரசு வழங்குகின்ற மாநில விருதுகளை சுமார் ஆறு முறை இவர் வென்றுள்ளார். குறிப்பாக இவருடைய ஆட்டோகிராப் திரைப்படம் இன்றளவும் சினிமா துறையில் ஒரு மைல் கல் என்றால் அது சற்றும் மிகையல்ல.

இறுதியாக இவர் இயக்கி வெளியான திரைப்படம் “திருமணம்”, சுமார் 4 ஆண்டுகளாக திரைப்படங்களை இயக்காமலும் சுமார் இரண்டு ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமலும் இருந்த சேரன், தற்பொழுது கன்னட உலகில் களமிறங்குகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் அவர்களை கொண்டு ஒரு படத்தை இவர் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

You May Also Like