சீனாவில் ஏன் எல்லா வகை பிராணிகளையும் சாப்பிடுகிறார்கள்..? இது ஒரு சோகக்கதை..!

இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு முக்கிய நாடுகளில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவியுள்ளது.

இந்த வைரசிற்கு இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனர்கள் அனைத்து வகையான காட்டு விலங்குகளையும் உன்பதால், அதிலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

ஆனால், சீனர்கள் ஏன் அனைத்து வகையான விலங்குகளையும் உண்கிறார்கள் என்பதை பற்றி தெரியுமா..? அதன் பின்னாடி இருக்கும் வலிகள் தெரியுமா..? அந்த சோகக்கதையை தற்போது பார்க்கலாம்..

Advertisement

உலகத்தின் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாக இருக்கும் சைனா, 1970-ஆம் ஆண்டுகளில் மிகவும் பஞ்சமான சூழ்நிலையில் இருந்தது. அவர்களுக்கு உண்பதற்கு உணவு கூட கொடுப்பதற்கு அரசாங்கத்தால் முடியவில்லை.

அதுமட்டுமின்றி, உணவு கிடைக்காமல், சுமார் 3 அரை கோடிக்கும் அதிகமான மக்கள் பசியால் உயிரிழந்தனர். இதனால், அங்கிருந்த மக்கள் ஒன்று சேர்ந்து சைனாவின் வுகான் நகரில் மார்க்கெட் ஒன்றை ஆரம்பிக்கின்றனர்.

அந்த மார்கெட்டில் அவர்களுக்கு கிடைக்கும் அத்தனை காட்டு விலங்குகளையும் வேட்டையாடி, விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். தொடக்கத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த மார்கெட், ஒரு கட்டத்திற்கு மேல் பெரிய அளவில் வளர்ச்சியை சந்தித்தது.

இதனால், அந்நாட்டு மக்களும் பசியில்லாமல் இருந்தனர். இந்த சந்தையின் மூலம் வருமானமும் கிடைப்பதால், அன்றைய சீன அரசாங்கமும், வன உயிரினங்களை வேட்டையாடுவதற்கு அனுமதியும் வழங்கியது.

இதையடுத்து பூதாகர வளர்ச்சி பெற்ற வுகான் மார்கெட், 1 லட்சம் கோடி ரூபாயை சீனா அரசாங்கத்திற்கு பெற்று தந்தது. ஆனால், தற்போது இதே வுகான் மார்கெட் சீனாவின் பல்வேறு உயிர்களை பலிவாங்கியுள்ளது.

சீனர்களால் தான் நமக்கு கொரோனா வைரஸ் பரவியது என்றும், அவர்கள் எதற்காக வன உயிரினங்களை உண்ணுகிறார்கள் என்றும் அவர்கள் மீது நமக்கு கோபம் இருந்துக்கொண்டு இருந்தது.

ஆனால், அவர்கள் இந்த பழக்கத்தை கொண்டு வந்ததற்கு இப்படி ஒரு சோகக்கதை இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.. எப்போதும் ஒரு கதையின் இரண்டு பக்கங்களையும் பார்க்க வேண்டியது முக்கியம் என்பது இதன்மூலம் அறிந்திருப்போம்…