Search
Search

அதற்குள்ள இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டதா? ஜனங்களின் கலைஞரே “வி மிஸ் யூ”

ஜனங்களின் கலைஞன், சின்னக்கலைவாணர் என்று பல படங்களுக்கு சொந்தக்காரர் அவர். ஆனால் அவருக்கு நாம் கொடுத்திருக்க வேண்டிய இன்னுமொரு சிறந்த பட்டம் “மரங்களின் நேசன்” என்பது தான், அதை யாராலும் மறுக்க முடியாது.

17 ஏப்ரல் 2021, தமிழ் சினிமா உலக வரலாற்றில் ஒரு கருப்புதினம், ஆம் ஒரு ஒப்பற்ற கலைஞனை, சமூக ஆர்வலரை இந்த உலகம் இழந்த தினம். அவர் இல்லை என்று நினைக்க தோன்றவில்லை, அதே சமயம் அவர் மறைந்து அதற்கு இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது.

விவேக், திரையில் சிரிப்பலையால், சிந்தனை அலையால் குலுங்கும் எர்த் குவேக். அய்யா அப்துல் கலாம் வழி நடந்து, பூமி வெப்பமாவதை தடுக்க மரங்களை நல்ல இடங்களில் நடத்துவங்கிய ஒரு சீர்திருத்தவாதி. பெருந்தொற்று சமயத்தில் பல நல்ல விஷயங்களை மக்களுக்கு சொன்னவர்.

இறப்பிற்கு ஒரு நாள் முன்பு கூட, தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றவர், அவர் மறைவுக்கு பின்னும் இன்றளவும் அவர் பெயரால் பல மரம்நடு விழாக்கள் நடந்தவண்ணம் உள்ளது. மரங்கள் உள்ளவரை காற்றும் விவேக் என்று கூறி தென்றலை வீசும். வி மிஸ் யூ சார்.

You May Also Like