Search
Search

அதுக்குள்ள 32 வருஷம் ஓடிருச்சு.. சின்ன தம்பியை நினைவுகூர்ந்த குஷ்பூ!

இன்றிலிருந்து (ஏப்ரல் 12) சரியாக 32 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம் வெளியாகி வசூல் அளவிலும் மக்கள் மனதிலும் பெரும் இடத்தை பிடித்தது. அப்படி மாஸ் ஹிட் கொடுத்த அந்த திரைப்படத்தின் பெயர் தான் சின்னத்தம்பி.

தாலிக்கு அர்த்தம் என்ன? என்று இந்த காலகட்டத்தில் சிறு பிள்ளைகளை கேட்டால் கூட விளக்கம் கூறி விடுவார்கள். ஆனால் அன்று இளைய திலகம் பிரபு, தாலி என்றால் என்னவென்றே தெரியாது என்பதற்கு ஏற்ப ஒரு உடல் மொழியை கொண்டு நடித்து கலக்கிய ஒரு திரைப்படம் தான் சின்னத்தம்பி.

குஷ்புவிற்கு கோயில் கட்டும் அளவிற்கு ரசிகர்களை உண்டாக்க முழு காரணமாக இருந்த ஒரு திரைப்படம் சின்ன தம்பி என்று கூறினால் அது சிறிதளவும் மிகையல்ல. ஐயா பி. வாசு அவர்களின் இயக்கத்தில், இளையராஜாவின் மெல்லிய இசையில் இந்த படம் முழுக்க சூப்பர் ஹிட்.

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே இன்றளவும் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்துள்ள நடிகை குஷ்பு அவர்கள் ஐயா வாசு அவர்களுக்கும் பிரபு அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைத்து கொடுத்ததற்காக இளையராஜா அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவர் என்றும் கூறியுள்ளார். இந்த படம் தன் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம் என்று அவரது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

You May Also Like