எனக்கு 44 வயசுலம் இல்ல.. மனம் திறந்த புதுமணப்பெண் லாவண்யா

லாவண்யா தேவி, 90களில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு நடிகை, சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சூரிய வம்சம் திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படத்திலும் நடித்திருந்தார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல தமிழ் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்துள்ளார் லாவண்யா. மேலும் தற்போது சீரியல்களிலும் கலக்கி வருகின்றார் அவர்.
இந்நிலையில் லாவண்யா தேவி மற்றும் பிரசன்னா ஆகிய இருவருக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் கோலாகலமாக நடந்தது. திருப்பதியில் நடந்த திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய சினிமா வட்டார நண்பர்கள் கலந்துகொண்டனர்.
தற்போது தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வரும் லாவண்யா சமூக வலைத்தளங்களில் தனக்கு வயது 44 என்று குறிப்பிடுகிறார்கள் என்றும், ஆனால் தனக்கு வெறும் 43 வயது தான் ஆகிறது என்றும் நகைப்புடன் கூறியுள்ளார். வயது வெறும் நம்பர் என்பதை தான் நன்கு உணர்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு வயச கூட்டிச்சொன்னது ஒரு குத்தமா…