சிட்ரஸ் பழங்கள் பொதுவாக புளிப்பு சுவை கொண்டது. இதில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. சிட்ரஸ் பழங்களில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை குறைக்கிறது. மேலும், நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடலை ஹைட்ரேட் செய்யும்.
சிட்ரஸ் பழங்கள் வகைகள்
- ஆரஞ்சு (Orange)
- எலுமிச்சை (Lemon)
- நெல்லிக்காய் (Gooseberry)
- திராட்சை (Grapefruit)
- சாத்துக்குடி (Mosambi)
- ஃபிங்கர் லைம் (Finger Lime)
- பாரசீக லைம் (Persian Lime)
- கீ லைம் (Key Lime)
- பம்பளிமாசு (Pomelo)
- கும்குவாட் (Kumquat)
- கலமொண்டின் (Calamondin)
- யூசு (Yuzu)
- பெர்கமோட் (Bergamot)
- புத்தர்கைண்ட் (Buddha’s Hand)
சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், இது உடல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, காய்ச்சல், வைரஸ் தொற்றுகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது.
ஆரோக்கியமான சருமம்: சிட்ரஸ் பழங்கள் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து, சருமத்தை இளமையுடனும் பளபளப்புடனும் வைத்திருக்க உதவுகின்றன.
கேன்சர் தடுப்பு : சிட்ரஸ் பழங்களில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இது வயிற்று புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க உதவும்.
எடை பராமரிப்பு : குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக, சிட்ரஸ் பழங்கள் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தருவதால், அதிக உணவுகொள்ளாமல் தடுக்கும்.
குறிப்பு
சிட்ரஸ் பழங்களை அதிகமாக உட்கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது அமிலத்தன்மை, புளிப்பு ஏப்பம், உமிழ்நீர் சுரத்தல் போன்ற செரிமான பிரச்சனைகளை அதிகரிக்கும்.