தென்னையின் மருத்துவப் பயன்கள்

தென்னை மரம் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. தென்னிந்தியாவில் விசேஷமாக கடற்கரை ஓரங்களிலும், இலங்கையில் எல்லா பாகங்களிலும் வளருகிறது. சராசரியாக ஒரு தென்னை மரம் 60 அடி முதல் 90 அடி உயரம் வரை வளரும்.

தென்னை மரம், நல்ல நீர் வளம் உள்ள பகுதிகளிலும், சூரியசக்தி கிடைக்கும் பகுதிகளிலும் அதிகமாக வளரும்.

thennai maram uses in tamil

தேங்காய் உற்பத்தியில் பிலிப்பைன்ஸ் நாடு உலக அளவில் முதலிடத்தை வகிக்கிறது. வாழை மரத்தைப் போல தென்னை மரத்தின் அனைத்துவித பொருட்களும், ஒவ்வொரு தேவைகளுக்குப் பயன்படுகிறது.

தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தை பெறுகிறது. தேங்காய், சாமி பூஜைகளுக்கு பயன்படுகிறது. தென்னை ஓலையைக் கொண்டு கூரை தயார் செய்யலாம்.

இது குளுமையை தரும் தேங்காய் நார் கயிறு திரிக்கவும், உரமாகவும் பயன்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் பயன்படுகிறது. வெட்டுக்காயங்களில் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.

தென்னையின் மருத்துவப் பயன்கள் :

தேங்காயில் உள்ள பேட்டி ஆசிட் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

தேங்காயில் தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து அனைத்தும் உள்ளன.

மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்குக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடிக்கப்படும் சாறு நல்ல மருந்து ஆகும்.

புண்ணாக்கோடு, கருஞ்சீரகத்தைச் சேர்த்து, தோல் நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் பால் உடல் வலிமைக்கு நல்லது.