மழை காலத்தில் சளி பிடிக்காம இருக்கணுமா? இதை சாப்பிடுங்க..

காலநிலை மாறும் பொழுது சிலருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும். அந்த நேரத்தில் சளி, இருமல் மற்றும் தலைவலி ஏற்படுவது இயல்பு தான். அந்த சமயத்தில் சத்தான உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மழை காலத்தில் உங்களுக்கு சளி பிடிக்காமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

sali neenga tips in tamil

மழைக்காலங்களில் நாம் தண்ணீர் சரியாக அருந்துவது கிடையாது. சாியான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். இதனால் சளியை, தண்ணீா் வெளியேற்றிவிடும். சுடு தண்ணீரைக் குடித்தால், தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Advertisement

சளி பிடிப்பது போல அறிகுறிகள் தோன்றினால் பூண்டை பச்சையாகவே எடுத்துக்கொள்ளலாம். பூண்டு உடலில் உள்ள பாக்டீாியாக்கள் மற்றும் பிற நோய்க் கிருமிகளை விரட்டும்.

குடைமிளகாயை வேக வைத்து அதில் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிடலாம். குடை மிளகாயில் வைட்டமின் சி சத்து சளியை விரட்டும்.

கடுமையான நெஞ்சுசளியை நீக்கும் பூண்டு பால்

சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் கற்பூரவள்ளியை அப்படியே சாப்பிடலாம். இதோடு துளசியையும் சேர்த்து சாப்பிடலாம்.