என்னது அரிசியில் இருந்தா பொறி செய்றாங்க? ஷெரின் கேட்ட அசத்தலான கேள்வி – கலகலக்கும் குக் வித் கோமாளி

பெருந்தொற்று சமயத்தில் பலர் வீட்டிலேயே முடங்கிய நிலையில் அவர்களுடைய மன அழுத்தத்திற்கு மிகப்பெரிய நிம்மதி கொடுத்தே சில விஷயங்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ஒன்று என்றால் அது நிச்சயம் மிகையல்ல.
கோமாளிகள் அடிக்கும் அரட்டையும், அதனால் படாதபாடுபடும் குக்களையும் பார்ப்பதற்கே ஆனந்தமாக இருக்கும். இந்நிலையில் இப்பொது CKC நிகழ்ச்சியின் 4ம் பாகம் நடந்து வருகின்றது. இத்தனை சீசன் கோமாளியாக இருந்த சிவாங்கி தற்போது குக் அவதாரம் எடுத்துள்ளார்.
தற்போது நாளை மற்றும் ஞாயிற்று கிழமை ஒளிபரப்பாகும் CKC ஷோவின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் என்ன தெரியுமா? எல்லோரும் பொறி உருண்டை செய்யவேண்டுமாம்.
அரிசையை வறுத்து, அதை பொறியாக்கி பிறகு பாகு காய்ச்சி பொறி உருண்டை செய்யவேண்டும் என்பது தான் டாஸ்க். இதை நடுவர்கள் வெளியிட, அதை கேட்ட நடிகை ஷெரின் என்னது அரிசியில் இருந்தா பொறி செய்றாங்க என்று கேட்க நானே ஒரு நிமிஷம் ஆடிபோய்ட்டேன். ஏன்மா இது கூடவா தெரியாது? என்று இருக்கிறது அவருடைய கேள்வி.
படு குஷியான இந்த எபிசொட் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒளிபரப்பாகும்.