Search
Search

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..!

copper water benefits in tamil

நமது முன்னோர்கள் தண்ணீரை சேமித்து வைக்க செம்புப் பாத்திரங்களை பயன்படுத்தி வந்தனர். செம்பு நீர் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களை அழித்து சுத்தமான நீராக மாற்றி தருகிறது.

நாம் பயன்படுத்தக்கூடிய எவர்சிலவர் பாத்திரங்களை விட செம்பு பாத்திரங்கள்தான் சிறந்தவை. செம்பு கலந்த நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டவை.

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு தேவையான தாமிரச்சத்து எளிதாக கிடைக்கிறது. சொம்பு பாத்திர தண்ணீரை குடிப்பதன் மூலம் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அழிக்கிறது. வயிற்றில் உருவாகும் புண்கள், அஜிரணம் மற்றும் தொற்றுநோய்களை தடுக்கிறது. வயிற்றை சுத்தம் செய்கிறது.

கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது. உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றுவதற்கும் செம்பு பாத்திர தண்ணீர் பயன்படுகிறது.

உடல் எடையை குறைக்க விரும்பினால் செம்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் செரிமான மண்டலம் சீராக செயல்படும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் செய்கிறது.

செம்பு பாத்திரத்தில் உள்ள நீர் பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் புதிய செல்களை உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது.

வெளிப்புற காயங்கள் மற்றும் உள்காயங்களை குணப்படுத்துகிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. உடலில் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்துகிறது.

முடக்குவாதம், மூட்டுகள் வீக்கம் போன்ற வலிகளை போக்க தாமிரம் உதவுகிறது. மேலும் இது எலும்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் குணங்களை கொண்டுள்ளது.

செம்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீர் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. சருமம் பளிச்சென்று வைக்க உதவுகிறது.

Leave a Reply

You May Also Like