நரம்பு மண்டலங்கள் சீராக இயங்க உதவும் சோளம்

சோளம் வட அமெரிக்காவில் இருக்கின்ற மெக்சிகோ நாட்டை பூர்விகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும். அந்த நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர் சோளத்தை உணவிற்கு மட்டுமல்லாமல் பல மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தினர். அந்த சோளத்தை நம் சாப்பிடுவதால் நமக்கு எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. நார்ச்சத்து நமக்கு கிடைப்பதால் பல நோய்கள் உடலில் வராமல் தடுக்கிறது. மேலும் மக்காச்சோளம் அதிகமாக சாப்பிடுவதால், மலசிக்கல் போன்ற பிரச்சனை நீக்குகிறது. மேலும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான பிரச்சனைகளுக்கு இது தீர்வாக அமைகிறது.

சோளத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமிருக்கின்றன. குறிப்பாக தயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் இந்த சோளத்தில் இருக்கின்றது. தயாமின் சத்து உடலில் நரம்பு மண்டலங்கள் சீராக இயங்க உதவும். அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுவது, ஞாபக மறதி நிலை மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமைகிறது. மேலும் இதிலிருக்கும் ஃபோலிக் ஆசிர் மனித உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத சத்தாக இருக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு போலிக் அமிலம் குறைவாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கும் பிறக்கும் குழந்தை சரியான எடை இல்லாமல், குறைவாக பிறக்கும் நிலை ஏற்படும். அவர்களின் வயிற்றின் உள்ளே வளரும் குழந்தைக்கு சோளம் பெருமளவு உதவுகிறது.

100 கிராம் சோளத்தில் 365 கலோரிச் சத்துக்கள் இருக்கின்றது. எனவே தான் இந்த சோளத்தில் இருக்கின்ற மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் பொருட்கள் விரைவில் உடல் எடை கூடுவதற்கு உதவுகிறது. உடல் எடை குறைவாக இருப்பவர்கள் தினமும் சோளத்தை சாப்பிட்டு வந்தால் கூடிய விரைவில் எதிர்பார்க்காத எடையை பெற முடியும்.

இதில் இருக்கும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் சத்துக்களை குறைத்து ரத்த நாளங்கள் நரம்புகள் மற்றும் இதயத்திற்கு செல்லக் கூடிய நரம்புகள் போன்றவற்றில் கொழுப்புகள் படிந்து விடாமல் தடுத்து, சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்து இதய பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.

சோளத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின் 40 வயதை கடந்த பலருக்கும் கண்களில் கண்புரை குறைபாடு ஏற்படுவதை பெருமளவு குறைக்கும் சக்தி கொண்டுள்ளது.

சோள மாவை தண்ணீர் அல்லது சிறிது பால் கலந்து நன்றாக முகத்தில் பூசி கொண்டு, சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வர முகப்பரு தழும்புகள் எண்ணெய் வழிதல் போன்ற குறைபாடுகள் நீங்கி பளபளப்பான முக தோற்றத்தை தருகிறது.

சோளத்தில் எண்ணற்ற தாது பொருட்கள் இருக்கின்றன. சோளத்தில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம், இரும்புச்சத்து, செம்புச் சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்திருக்கின்றது.

இந்த அனைத்து வகை சத்துகளும், எலும்பு பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, இதய துடிப்பு பிரச்சனை போன்றவற்றை குணமாக்கும்.

Recent Post