பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதில் 44 ஆயிரத்து 582 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் 3 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பிரேசில் நாட்டில் ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 3 லட்சத்து 30 ஆயிரத்து 890 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.