Search
Search

கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 3100 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் 10 வகையான கொரோனா வைரஸ் தொற்றுக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

  • Middle east respiratory syndrome
  • Transmissible gastroenteritis virus
  • Murine coronavirus
  • SARS coronavirus
  • Porcine epidemic diarrhea virus
  • Human coronavirus 229E
  • Mouse hepatitis virus
  • Bulbul carona virus HKU11
  • Alphacoronavirus 1
  • Meniopterus bat corona virus

தற்போது உலகை நாடுகளையே உலுக்கிக் கொண்டிருக்கிற இந்த கொரோனாவுக்கு (nCoV-2019) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் என்ன? தற்காப்பு நடவடிக்கைகள் என்ன? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் பின்வரும் அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.

  • ஜலதோஷம்
  • காய்ச்சல்
  • நெஞ்சு சளி
  • சளித்தொல்லை
  • வறண்ட இருமல்
  • வறண்டுபோன தொண்டை
  • லேசான நெஞ்சுவலி
  • மூச்சு விடுவதில் சிரமம்

இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அதனை அலட்சியம் செய்யாமல் உடனே உங்கள் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

சிலருக்கு சாதாரண நேரத்தில் கூட வயிற்றுப்போக்கு ஏற்படலாம், மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கைகளின் பின் பக்கத்தில் கண்டிப்பாக கழுவ வேண்டும். நக இடுக்குகளை கழுவ வேண்டும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தும்மல், இருமல் உள்ளவர்கள் அருகே செல்ல வேண்டாம். உங்களுக்கு தும்மல், இருமல் இருந்தால் முகத்தை மாஸ்க் கொண்டு மூடுவது நல்லது.

உங்களுக்கு வைரஸ் தாக்குதல் ஏற்படாமல் இருக்க குறைந்தது மற்றவர்களிடம் இருந்து மூன்று அடி தள்ளி நடக்க வேண்டும்.

விலங்குகளுடன் விளையாடுவது, சரணாலயங்கள் செல்வது போன்றவற்றை சில நாட்கள் தவிர்ப்பது நல்லது.

உலக சுகாதார மையம் கொடுத்த அறிவுரையின் படி உங்களுக்கு வைரஸ் தாக்குதல் ஏற்படாமல் இருக்க குறைந்தது மற்றவர்களிடம் இருந்து மூன்று அடி தள்ளி நடக்க வேண்டும். கூட்டமாக இருக்கும் இடங்களை தவிர்க்க வேண்டும்.

உலகம் முழுக்க பரவி வரும் நிலையில் மத்திய அரசு கொரோனா வைரஸ் உதவி எண்ணை அறிவித்துள்ளது

இலவச உதவி எண் : +91-11-23978046

மின் அஞ்சல்: [email protected]

Leave a Reply

You May Also Like