பசியால் புல்லை தின்ற மாடு..! மீண்டும் அரங்கேறிய ஒரு கோர சம்பவம்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கேரளாவில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது. பசியோடு வந்த கர்ப்பிணி யானை ஒன்று, சாலையில் கிடந்த அண்ணாச்சி பழத்தை சாப்பிட்டு வாய் சிதறி உயிரிழந்தது.

இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதே மாதிரியான கொடுமையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வேலூர் மாவட்டம் வேப்பங்குளம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் கர்ப்பிணியாக உள்ள பசு மாட்டை வளர்த்து வந்துள்ளார்.

Advertisement

பசியில், இருந்த அந்த மாடு, தரையில் கிடந்த புல்லை எடுத்து சாப்பிட்டுள்ளது. உடனே, வாய் வெடித்து, சதை சிதறி அந்த பசு மாடு வலியால் துடித்துள்ளது.

சத்தம் கேட்ட வெளியே வந்த மாட்டின் உரிமையாளர், மாட்டின் நிலை கண்டு கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.